200 நாட்களைக் கடந்தும் ஓடும் சிரஞ்சீவி & பாலகிருஷ்ணாவின் படங்கள்!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (07:44 IST)
தமிழ்நாட்டை விட ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சினிமாவை அங்குள்ள ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதிலும் மாஸ் நடிகர்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா மற்றும் பவன் கல்யாண் போன்றவர்களின் ரசிகர்களை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு வெறித்தனமான ரசிகர்கள் அவர்களுக்கு உண்டு.

இந்நிலையில்தான் பாலகிருஷ்ணாவின் வீரசிம்ஹா ரெட்டி திரைப்படமும் சிரஞ்சீவியின் வால்டர் வீரைய்யா திரைப்படமும் சில திரையரங்குகளில் 200 நாட்களைக் கடந்தும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த இரு படங்களும் வெளியான போதே ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன. ஓடிடி ரிலீஸின் போது தமிழ் நாட்டிலும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் இப்போது ஆந்திராவின் குன்னூரில் இந்த இரு படங்களும் தற்போது வரை ஒரு சில திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்