மைனாவே மைனாவே.... சின்மயியின் இனிமையான குரலில் மயங்கிய ரசிகர்கள் - Live வீடியோ!

Webdunia
புதன், 17 மே 2023 (20:20 IST)
தமிழ் சினிமாவில் பல்வேறு இனிமையான பாடல்களை பாடி பிரபலமானவர் பாடகி சின்மயி. ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் இவர் பாடி அறிமுகம் ஆன இவர் வசீகரா, பாய்ஸ், எனக்கு 20 உனக்கு 18, குத்து, அறிந்தும் அறியாமலும், வெண்ணிலா கபடி குழு, எந்திரன், ஐ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார். 
 
இதனிடையே வைரமுத்து தன்னிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இவர் கடந்த 2014ம் ஆண்டு பிரபல நடிகரான ராகுல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். சின்மயி திருமணத்தில் கலந்து கொண்டவர்களிடம், மணமக்கள் பரிசு பொருள் எதுவும் வாங்கவில்லை. அதற்கு பதில், லடாக்கில் உள்ள மலை சாதியினரின் பள்ளிக்கு கட்டிடம் கட்ட உதவும்படி கேட்டுக்கொண்டனர். இவர்களுக்கு தற்போது இரட்டை குழந்தைகள் உள்ளனர். 
 
இந்நிலையில் சின்மயி பாடல் நிகழ்ச்சி ஒன்றில் தனது இனிமையான குரலால் மைனாவே மைனாவே என்ற பாடலை பாடி அங்கிருந்த பாடகி சித்ரா உள்ளிட்ட அங்கிருந்த ஆடியன்ஸ் மற்றும் ரசிகர்களை மெய்மறக்க செய்துவிட்டார். இந்த லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arishto Nijanthan (@arish2.o_nijanthan)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்