அந்த படம் ஓடியதால்தான் இரண்டாம் குத்து எடுக்கிறார்கள் – சேரன் அதிரடி!

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (16:33 IST)
சமீபத்தில் வெளியான போஸ்டர்கள் மற்றும் டீசரால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இரண்டாம் குத்து படத்துக்கு எதிராக இயக்குனர் சேரன் கருத்து தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் பி கிரேட் படத்தைப் போல உருவான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து. 2018ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில்  கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா, கருணாகரன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அடல்ட் காமெடி ரசிகர்கள் மத்தியில் யங்ஸ்டர்ஸை குறிவைத்து வெளிவந்த இப்படம் ஓஹோன்னு ஓடியது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அதில் கதாநாயகனாக முதல் பாகத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமாரே கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் ஆகியவை சில தினங்களுக்கு முன்னர் வெளியாகின. அவை இரண்டும் ஆபாசத்தின் உச்சமாக இருப்பதாக தமிழ் சினிமாவில் இருந்தே எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான சேரன் ‘இந்த படத்தை மக்களே நிராகரிக்க வேண்டும். இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வெற்றி பெற்றதால்தான் அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்குகிறார்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்