தெரியாமல் ரஜினிக்கு அறிவுரை சொல்லிட்டேன், என்னை விட்டுடுங்க: சேரன் கதறல்

Webdunia
வெள்ளி, 19 மே 2017 (22:04 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுகு வருவாரா? மாட்டாரா? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு கிட்டத்தட்ட விடை கிடைத்துவிட்டது. அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றே அவரது இன்றைய பேச்சு உறுதி செய்துவிட்டது. போர் (தேர்தல்) வரும் காலத்தை அவரும் அவருடைய ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.



 


இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் சேரன் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவிக்கையில் 'எப்போதும் பொய்யே பேசாத சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். ஊழலும், லஞ்சமும் நிறைந்த இந்த அரசியல் வேண்டாம் என்றும், அரசியல் லாபங்களுக்காக உங்களை வைத்து ஆதாயம் தேட நினைப்பவர்களிடம் உஷாராக இருங்கள் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

ஆனால் சேரன் கூறிய கருத்தை ஒருசில ஊடகங்கள் திரித்து கூறியதால் ரஜினி ரசிகர்கள் சேரன் மீது பாய்ந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சேரன், 'தெரியாமல் ரஜினிக்கு அறிவுரை கூறிவிட்டேன். நான் கூறியதை சில ஊடகங்கள் தங்களது எண்ணங்களை எனது கருத்து மூலம் தவறாக சித்தரித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். உண்மையில் ரஜினி சார் அரசியலுக்கு வரவேண்டாம் என்பதை தான் அவருக்கு எச்சரிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்