செல்ல்ம்மா பாடலுக்கு மட்டும் இவ்வளவு செலவா? ரசிகர்களுக்காக சர்ப்ரைஸ்!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (17:17 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லமா பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பார்க்கப்பட்டது.

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். ஆனால் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் படம் திரையரங்கில் வெளியாவதையே விரும்புகிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்று செய்திகள் சமூகவலைதளங்களில் பரவின.

ஆனால் அதையெல்லாம் தயாரிப்பாளர் மறுத்தார். இந்நிலையில் இப்போது திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளோடு இயங்கலாம் என அறிவிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் இப்போது அக்டோபர் 9 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலான செல்லம்மா பாடல் வைரல் ஹிட் ஆனது. ஆனால் படத்தில் இந்த பாடல் இடம்பெறாது என தகவல் வெளியானது.

ஆனால் அதை தயாரிப்பு தரப்பு மறுத்துள்ளது. இந்த பாடலுக்காக சுமார் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து உருவாக்கியுள்ளதாக தகவலை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்