சிவகார்த்திகேயனின் ‘டான்’: அடுத்தகட்ட பணி தொடங்கியது!

வியாழன், 23 செப்டம்பர் 2021 (16:15 IST)
சிவகார்த்திகேயனின் ‘டான்’: அடுத்தகட்ட பணி தொடங்கியது!
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் என்ற திரைப்படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சிவகார்த்திகேயன் ‘டான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்றும் சமீபத்தில்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என்றும் கூறப்பட்டது. ஒரு சில பேட்ச் வொர்க் படப்பிடிப்பு மட்டுமே இருக்கும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளது 
 
‘டான்’ படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முதல்கட்டமாக சிவகார்த்திகேயன் தனது பகுதியின் டப்பிங் பணியை தொடங்கி உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்