சார்லி ரீமேக்கில் மாதவன் - அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2016 (15:59 IST)
மலையாளத்தில் வெளியான சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கில் மாதவன் நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரீமேக்கை ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.


 
 
சென்ற வருட கிறிஸ்துமஸுக்கு சார்லி வெளியானது. மார்டின் ப்ரக்காட் இயக்கிய இதில் துல்கர் சல்மான், பார்வதி நடித்திருந்தனர். படம் கேரளாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் துல்கரின் நடிப்பைப் பார்த்த மாதவன் ட்விட்டரில் அவரை பாராட்டியிருந்தார்.
 
மாதவன் சார்லி படத்தையும், அதில் நடித்த துல்கரையும் பாராட்டியதால், சார்லி தமிழ் ரீமேக்கில் மாதவன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. நல்ல படங்களின் ரீமேக்கில் நடிக்க எனக்கு தயக்கமில்லை, ஆனால், சார்லி ரீமேக்கில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை என மாதவன் கூறியிருந்தார்.
 
தற்போது பிரமோத் பிலிம்ஸ் சார்லியின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளது. அவர்கள் மாதவனை வைத்து படத்தை தயாரிக்கின்றனர். ஏ.எல்.விஜய் ரீமேக்கை இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்