திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பான கேள்விக்கு, சாரி - சாரி, நோ கமெண்ட்ஸ் என நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம், அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த 20ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் திரைப்படம் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார். தர்பாருக்கு பிறகு படம் முழுவதும் போலீசாக நடிப்பது வித்தியாசமாக இருந்தது என்று அவர் கூறினார்.