மீனுக்கு சான்றிதழ் வாங்கிய இயக்குனர் மணி சேயோன்!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2017 (12:58 IST)
நடிகர் சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சேர்ந்து நடிதுள்ள படம் கட்டப்பாவ காணோம். விண்ட் சைம்ஸ் மீடியா எண்டர்டைன்மெண்ட் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார் வெங்கடேஷ், லலித் இணைந்து தயாரித்துள்ளனர். அறிவழகன்  உதவியாளர் மணி சேயோன் இயக்கி உள்ளார்.

 
இந்த படம் ஒரு மீனை சுற்றி நடக்கிற கதை அதற்கும் விலங்கு நல வாரியத்திடமிருந்து சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள். விலங்குகளை வைத்து படம் எடுத்தால், விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் மீனை வைத்து  படம் எடுப்பதால் என்ன செய்வது என்ற குழப்பம் இருந்தது?  படம் வெளிவரும் நேரத்தில் மீன்கள் பாதுகாப்பு இயக்கம் என்கிற  பெயரில் எதாவது பிரச்சனை வரும் என கருதி முன்னெச்சரிக்கையாக சான்றிதழை வாங்கிவிட்டோம். தற்போது மீன் தயாரிப்பாளர் அலுவலகத்தில் பத்திரமாக உள்ளது என்கிறார் இயக்குனர் மணி சேயோன்.
அடுத்த கட்டுரையில்