நடிகை சுதாவிடம் மன்னிப்புக்கோரிய மத்திய தொழில்பாதுகாப்புத்துறை!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (18:58 IST)
தமிழ் சினிமாவில் பிரபல நடிகை சுதாவின் செயற்கைக் காலை அகற்றச் சொன்ன விவகாரத்தில் மத்திய தொழில்பாதுகாப்புப் படை அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

ஒவ்வொரு தடவையும் விமான நிலையத்தில் தனது செயற்கைக் காலை அகற்றச் சொல்லித் தன்னைக் கட்டாயப்படுத்துவதாக பிரபல நடிகை சுதாவிடம் மத்திய தொழில்பாதுகாப்புப் படை கட்டாயப்படுத்துவதாக அவர் இன்று உருக்கமாகப்பேசி ஒரு வீடியோ பதிவிட்டு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதமர் மோடிக்கு வலியுறுத்தினார்.

இந்நிலையில், நடிகை சுதாவின் செயற்கை காலை அகற்றச் சொன்ன விவகாரத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு துறை அவரிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. மேலும் இவர் பிரபல நடனக் கலைஞராகவும், நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்துகொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்