மக்களவையை காலவரையின்றி ஒத்திவைத்த சபாநாயகர்.. குளிர்கால கூட்டத்தொடர் முடிந்ததா?

Siva

வெள்ளி, 20 டிசம்பர் 2024 (11:36 IST)
மக்களவையை காலவரையின்றி சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்ததாக வெளிவந்த தகவலை அடுத்து, குளிர்கால கூட்டத்தொடர் முடிவுக்கு வந்ததாகவே கருதப்படுகிறது.

மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கிய நிலையில், அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம் மற்றும் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய விவகாரம் என தொடர்ந்து அவையில்  அமளி ஏற்பட்டதால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இந்த கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே மசோதா அறிமுகம் செய்யப்பட்டது ஒன்றுதான் உருப்படியான செயலாக உள்ளது. அதுவும் மெஜாரிட்டி இல்லாததால், நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும், அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவையில் கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை அவை கூடியவுடன், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து போராட்டம் செய்வதற்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதனை அடுத்து, குளிர்கால கூட்டத்தொடர் முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்