ரிலீசுக்கு பின் ட்ரிம் செய்ய தேவை இல்லை.. ‘கங்குவா’ ரன்னிங் டைம் இவ்வளவு தான்..!

Mahendran
செவ்வாய், 29 அக்டோபர் 2024 (18:39 IST)
சமீப காலமாக வெளியாகி கொண்டிருக்கும் திரைப்படங்கள் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ரன்னிங் டைம் கொண்டு அதன் பின்னர் ரிலீஸ்க்கு பின்னர் ட்ரிம்  செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘கங்குவா’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் குறைந்த அளவே இருப்பதால் ரிலீஸ்க்கு பின்னர் ட்ரிம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்படுகிறது
 
நவம்பர் 14 அன்று உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் திரைக்கு வரவிருக்கும் சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் இந்தியா முழுவதும் பிரபலமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சென்சார் அதிகாரிகள் இப்படத்துக்கு   'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். 
 
மேலும் இந்த படத்தின் நீளம் 154 நிமிடங்கள், அதாவது 2 மணி 34 நிமிடங்களாக உள்ளது. இது ஒரு வெற்றி படத்திற்கு தேவையான சீரான நீளமாக இருப்பதால், வெளியீட்டிற்கு பிறகு நேரத்தை குறைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த படத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ஜி. மாரிமுத்து, தீபா வெங்கட் மற்றும் கே.எஸ். ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்துள்ள இந்த பிரம்மாண்ட படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்