’’ஹிட் படங்களின்’’ தயாரிப்பாளர் மரணம் – திரைத்துறையினர் அதிர்ச்சி…

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (10:43 IST)
சின்னத்தம்பி, பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட பல ஹிட் படங்களைத் தயாரித்த கே.பி. பிலிம்ஸ் பாலி உடல்நலக்குறைவா ல்மருத்துவமனையில் அனுமதிகப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த படங்களில் ஒன்று சின்னத்தம்பி. பி வாசு இயக்கத்தில் இளைய திலகம் பிரபு மற்றும் குஷ்பு மனோரமா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்த படம் சின்னத்தம்பி. பிரபுவின் கேரியரில் மறக்க முடியாத படமாகவும் அமைந்தது, பாடல்களை இளையராஜா காவியமாகக் கொடுத்தார். இப்படத்தைத் தயாரித்தவர் கே.பி.பிலிம்ஸ் பாலு. அதேபோல் பிரபு , மதுபாலா நடித்த பாஞ்சாலங்குறிச்சி படத்தைத் தயாரித்தவரும் அவர்தான்.

பாலு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டிருந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தயாரிப்பாளர் என் நண்பர் KB FILMS பாலுவின் இறப்பு செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் பாரதிராஜா எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்