இந்நிலையில், இன்று தனது புதிய தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளை அறிமுகப்படுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ராஜேந்தர் வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது நடவடிக்கைகளைப் பொருத்திருந்து பார்க்கும்படி சவால் விட்டுள்ளார்.
மேலும் தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றுள்ளது குறித்துப்பேசிய அவர், எதிரணிக்கு பசும்பாலும், எங்களுக்குப் புட்டிபாலும் கொடுத்துவிட்டனர். நான் பாம்புக்கே அஞ்சுவதில்லை. இதில், எறும்புக்கும் , பல்லிக்குமா அஞ்சப் போகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சங்கத்தில் ஜே.சுதிஸ்,சிங்கார வடிவேலன் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக உள்ளனர். மேலும் இந்தச் சங்கத்தின் நலனுக்கான சம்பளம் பெறாமல் சிம்பு ஒரு படம் நடித்துக்கொடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.