100 நாட்களுடன் முடியாது 'பிக்பாஸ் 2' 'சண்டே' வுக்காக தொடரப்போகுது சண்டை!

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (12:31 IST)
‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி, 6 நாட்கள் கூடுதலாக அதாவது 106 நாட்கள் ஒளிபரப்பாக உள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில், யாஷிகா ஆனந்த், மஹத் அனந்த் வைத்யநாதன், என்.எஸ்.கே.ரம்யா, வைஷ்ணவி, பாலாஜி, டேனியல், ஷாரிக் ஹாசன், நித்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், பொன்னம்பலம், மமதி சாரி,  சென்றாயன், ஐஸ்வர்யா தத்தா, ஆகிய 16 பேரும் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.
இதில், மமதி சாரி, அனந்த் வைத்யநாதன், நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, பொன்னம்பலம், வைஷ்ணவி, ஷாரிக் ஹாசன், மஹத், டேனியல் ஆகிய 9 பேரும்  இதுவரை ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறி விட்டனர் புதிதாக விஜயலட்சுமி வீட்டுக்குள் சென்றுள்ளார்.
 
கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது ‘பிக் பாஸ் 2’. அதாவது, 80 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில், வெற்றியாளர் யார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். பொதுவாக, இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் ஒளிபரப்பாகும். அதன்படி பார்த்தால், ஜூன் 17-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் நூறாவது நாள், செப்டம்பர் 24-ம் தேதி திங்கட்கிழமையுடன் முடிந்துவிடும். ஆனால், வார நாட்களில் ஃபைனல் நடக்காது என்பதால், 6 நாட்களை நீட்டிக்கப் போவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
 
எனவே, 106-வது நாளில் தான், அதாவது செப்டம்பர் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியை முடிக்க ‘பிக் பாஸ்’ டீம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள்  தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்