குஜராத்தில் பேருந்து, சொகுசுகார் மோதி விபத்து! 9 பேர் பலி

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (14:48 IST)
குஜராத் மாநிலம்  நவ்சாரி மாவட்டத்தில் ஒரு பேருக்கு, கார் நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்  மாநிலம் நவ்சாரி  மாவட்டம் வெஸ்மா அருகில் சொகுசு பேருந்து மீது ஒரு சொகுசு கார் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த பயங்கர விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,15 பேர் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், விபத்து நடந்தது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும்  நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்