ஒரு நாளுக்கு ஒரு கோடி கேட்கும் காமெடி நடிகர்!!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (15:07 IST)
தெலுங்கு திரையுலக காமெடி நடிகரான பிரம்மானந்தம் தான் படத்தில் நடிக்க ஒரு நாளுக்கு ஒரு கோடி கேட்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.


 
 
தெலுங்கில் இவர் இல்லாமல் ஒரு படம் கூட இருக்காது. அந்த அளவிற்கு அங்கு புகழ்பெற்றவர். தமிழில் கில்லி, மொழி, வாலு போன்ற படங்களில் சிறு பாத்திரத்தில் நடித்தார். 
 
தெலுங்கில் மட்டும் 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர். தற்போது கமல் இயக்கி நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், பிரம்மானந்தம் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒரு நாளுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என கேட்பதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாத போதிலும், ஒரு நாளைக்கு ஒரு கோடியா என வாயை பிளக்கின்றனர் பலர்.
அடுத்த கட்டுரையில்