நித்யானந்தா கேரக்டரில் பாபி சிம்ஹா

Webdunia
திங்கள், 8 மே 2017 (19:02 IST)
‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தில், நித்யானந்தா சாமியார் கேரக்டரில் நடித்திருக்கிறார் பாபி சிம்ஹா.


 

 
விஜய் தேசிங்கு இயக்கத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ள படம் ‘வல்லவனுக்கு வல்லவன்’. ஷிவதா நாயர் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், இரண்டாவது ஹீரோயினாக பூஜா தேவரியா நடித்துள்ளார். பாபி சிம்ஹாவே தயாரித்துள்ள இந்தப் படத்தில், மொத்தம் 11 கெட்டப் போட்டு நடித்திருக்கிறாராம். ஆனால், படம் நீளமாக இருப்பதால், 9 கெட்டப்பை மட்டுமே படத்தில் வைத்திருக்கிறார்களாம்.
 
சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ என நீளும் இந்தப் பட்டியலில், சர்ச்சைக்குப் பெயர்பெற்ற நித்தியானந்தா கெட்டப்பிலும் நடித்திருக்கிறாராம் பாபி சிம்ஹா. ‘சூப்பர் சிங்கர்’ டைட்டில் வின்னர் அஜீஸ், இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்