விஜய் பிறந்தநாளில் வெளியாகும் பிகில்...!

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (16:46 IST)
மீண்டும் வெளியாகிறது பிகில் திரைப்படம்...

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான படம் பிகில். அட்லீ இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி 180 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 300 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்ப்போது விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற .ஜூன் 22ம் தேதி இப்படம் மீண்டும்  தியேட்டரில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர். அதன்படி பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற இடங்களில் வெளியாகும் என தகவல்கள் கூறுகிறது. கொரோனா ஊரடங்கில் சற்று தளர்வு ஏற்பட்டுள்ளதால் படங்கள் வெளியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்