சசிகுமார் படத்தில் நாயகியாகும் பிக்பாஸ் போட்டியாளர்!

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (20:18 IST)
சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் பிக் பாஸ் போட்டியாளர் நாயகியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன
 
சசிகுமார் நடிப்பில் சரவணன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ’நந்தன்’. இந்த படத்தில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுருதி பெரியசாமி நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
இவர் இந்த படத்தில்தான் நடிகையாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பணக்கார ஜமீன்தாரிடம் வேலை பார்க்கும் வேலையாளாக சசிகுமார் நடிக்க இருப்பதாகவும் அவருடைய மனைவி கேரக்டரில் சுருதி பெரியசாமி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த படத்தில் பாலாஜி சக்திவேல் வில்லனாக நடிக்கிறார் என்றும் இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்தில் படமாக்கப்பட உள்ளதாக இயக்குனர் சரவணன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்