நடிப்பில் இருந்து விலகுகிறாரா பிக்பாஸ் சரவணன் விக்ரம்.. இன்ஸ்டா பதிவால் பரபரப்பு..!

Siva
ஞாயிறு, 21 ஜனவரி 2024 (08:31 IST)
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான  சரவணன் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான்  நடிப்பிலிருந்து விலகுகிறேன் என்றும் எல்லோருக்கும் நன்றி என்றும் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பிக் பாஸ் சரவணன் விக்ரம் பிக்பாஸ் வீட்டில் கலகலப்பாக இருந்தார் என்றாலும் மாயா குரூப்பில் அவர் சேர்ந்து கொண்டதால் அவர் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார். குறிப்பாக நிச்சயம் நான் தான் டைட்டில் பட்டதை வெல்வேன் என்று அவர் நள்ளிரவில் கூறியது கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது. 
 
இந்த நிலையில்  மாயா அவரை நன்றாக பயன்படுத்திவிட்டு அதன் பிறகு அவரையே கரப்பான் பூச்சி என்று கூறியதை கூட பொருட்படுத்தாமல் அவருடன் மீண்டும் இணைந்து அவர் செயல்பட்டது பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் பிக் பாஸ் சரவணன் தனது சமூக வலைதளத்தில் நான் நடிப்பிலிருந்து விலகுகிறேன் என்றும் எல்லோருக்கும் நன்றி என்றும் கூறியிருப்பது அவரது ரசிகர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இது குறித்து அவர் விரைவில் விரிவான விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்