நடிகை ஷகிலா மீது அவரது வளர்ப்பு மகள் தாக்குதல்

Sinoj
சனி, 20 ஜனவரி 2024 (21:41 IST)
ஷகிலா மீது அவரது வளர்ப்பு மகள்  தாக்குதல் நடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மலையாள சினிமாவில் 80, 90 களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. இவர், தமிழில், அழகிய தமிழ் மகன், சிவா மனசுல சக்தி  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீப காலமாக டியூடியூப் சேனல்களில் பிரபலங்களை நேர்காணல் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில்,   ஷகிலா மீது அவரது வளர்ப்பு மகள் சீத்தல்  தாக்குதல் நடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஷகிலாவின் வளர்ப்பு மகள் சீத்தல். இவரது தாய் சசி, சகோதரி ஹமீலா ஆகியோர் ஷகிலாவை தாக்கியதாகவும், சமாதானப்படுத்த சென்ற ஷகிலாவின் வழக்கறிஞர் செளந்தர்யா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்