பிக்பாஸ் பாலாஜி தான் அடுத்த படத்தின் ஹீரோ: பிரபல தயாரிப்பு நிறுவனம் முடிவு

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (17:43 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆரி மற்றும் பாலாஜி ஆகிய இருவரிடையே தான் மிகப்பெரிய போட்டி நடைபெற்று வருகிறது. மற்றவர்களெல்லாம் கிட்டத்தட்ட இவர்களது சண்டையையும் விளையாட்டையும் வேடிக்கை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஆரிக்கு சவாலாக பாலாஜியும் பாலாஜிக்கு சவாலாக ஆரியும் இருந்து வருகிறார்கள் என்பதும் இருவரும் வெளியே வந்தவுடன் மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே ஆரியின் படங்கள் அனைத்தும் வெளியானால் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பாலாஜிக்கு ஒரு பிரபல நிறுவனத்திடமிருந்து வாய்ப்பு வந்துள்ளது என தெரியவந்துள்ளது.
 
அஜித் விஜய் உள்பட பல பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்த ஒரு பிரபல நிறுவனம் பாலாஜி வெளியே வந்தவுடன் அவர்தான் எங்களுடைய அடுத்த படத்தின் ஹீரோ என்று தெரிவித்து உள்ளதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது 
 
இந்த நிறுவனம் பாலாஜி வெளியே வந்தவுடன் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த படம் குறித்து அதிகாரம் ஒரு அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்