இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இன்றைய நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனேவே வெளியடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், நித்யாவிற்கும், மகத்திற்கும் சண்டை வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது. இரண்டாவது வீடியோவில், நித்யா பாலாஜியை குடிக்கிறார் என்று நேரடியாக தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.
இந்நிலையில், 3வது ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், நடிகர் மகத் தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அந்த பெண் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறி காதல் தோல்வி தொடர்பான பாடல் ஒன்றை ரம்யாவிடம் பாடுகிறார் . மகத்தின் காதல் கதையை கேட்டு யாஷிகா ஆனந்த் அழுகிறார்.