பா.ரஞ்சித் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்!

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (16:26 IST)
பா. ரஞ்சித் தயாரிக்கும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தில் ரித்விகா ரீஎண்ட்ரி கொடுக்கிறார்..


 
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் மகத், யாஷிகா ஆகியோர் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். ஐஸ்வர்யா தத்தாவும் பிசியாகிவிட்டார். 
 
இந்நிலையில் பிக் பாஸ் 2 டைட்டிலை வென்ற ரித்விகாவுக்கும்  பட வாய்ப்பு கிடைத்துள்ளது. 
 
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான "பரியேறும் பெருமாள்" வெற்றிப்படமாக அமைந்தது. 
 
இந்நிலையில், நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்குகிறார். 


 
தினேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அனேகா, ரித்விகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இதன்மூலம் நடிகை ரித்விகா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார். இதை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
ரித்விகாவுக்கு கிடைத்துள்ள பட வாய்ப்பு குறித்து அறிந்து ஐஸ்வர்யா தத்தா, மகத்,  விஜயலட்சுமி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்