இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா? –இணையத்தில் எழுந்துள்ள சாதி ஒழிப்புக் குரல்..

சனி, 17 நவம்பர் 2018 (09:43 IST)
தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரவலானக் குரலகள் எழுந்துள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள வெங்டேஷபுரம்  கிராமத்தைச் சார்ந்த ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் நந்தீஷ். 25 வயதான இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சுவாதியும் காதலித்து வந்துள்ளனர்.  அதற்கு சுவாதியின் பெற்றோர் சம்மதிக்காததால்,  கடந்த ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி சூளகிரியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணத்திற்க்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு காரணமாக, மூன்று மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டுச் சென்றுள்ளனர். இவர்கள் இருவரையும் 11.11.2018 காணவில்லை என அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனித்தனியாக நவம்பர் 14 ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இவர்கள் இருவரையும் தேடி வந்த தமிழகக் காவல்துறை, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மலஹள்ளி பகுதி காவிரி ஆற்றில் இரு ஆண் பெண் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாகக் கிடைதத தகவலறிந்து சடலத்தைக் கைப்பற்றிய போது அது நந்தீஷ் மற்றும் சுவாதியின் உடல் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாதி வெறி பிடித்த சுவாதியின் பெற்றோர் மற்றும் உறவினர்களே இந்தக் கொலையை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சமூகத்தில் எவ்வளவு மாற்றங்கள் நடந்தாலும் மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ள இந்த சாதி எனும் கொடிய நோய் இன்னும் ஒழிந்த பாடில்லை.

இதையடுத்து இணையத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் இந்த ஆணவக்கொலைக்காக தங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் ரஞ்சித் தனது டிவிட்டரில் ’இதோ நிகழ்ந்தேறி விட்டது இன்னுமொரு கொடுந்துயர சாதி ஆணவ படுகொலை...வாய் பேச முடியாத காளைகள் எங்கள் குடும்பத்தில் ஒன்று என போராடிய தமிழ் போராளி தோழமைகளே!!! வாய் பேச முடிந்த நந்தீஸ் சுவாதி இவர்களை கொன்ற சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!! வாருங்கள் நீதி கேட்போம்!!’ என தனது கோபத்தைப் பதிவு செய்துள்ளார்.

உடுமலைப் பேட்டை சங்கர்-கௌசல்யா, விழுப்புரம் இளவரச்ன் –திவ்யா, ஆந்திராவின் ப்ரனய் – அம்ருதா தற்போது கிருஷ்ணகிரி நந்தீஷ் – சுவாதி என இன்னும் எத்தனைப் பேரின் காதலை அழிக்கக் காத்திருக்கிறதோ இந்த சாதி வெறி?

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்