வாய மூடிக்கிட்டு கேட்டிட்டு இருந்தேன் - கொந்தளித்து வீடியோ வெளியிட்ட அபிராமி!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (15:48 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களும் ஒருவரான அபிராமி அஜித் நேரக்கொண்ட பார்வை படத்தில் நடித்து இன்னும் பிரபலமாகிவிட்டார். பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆரம்பத்தில் கவினுடன் காதல், பின்னர் அவர் நிராகரித்ததும் முகனுடன் காதல் என மக்களிடையே வெறுப்பை சம்பாதித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும் குறைந்த நாட்களிலேயே முன்னணி கதாநாயகி ரேஞ்சிற்கு பிரபலமாகிவிட்டார். சில படங்களில் தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்ப்போது மெட்ராஸ் யுனிவர்சிட்டியில்  எம்ஏ படித்து வரும் அபிராமி கடந்த இரண்டு நாட்களுக்கு பைனல் செமஸ்டர் எக்ஸாம் எழுதியது குறித்த அனுபவத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

அதில் அந்த கல்லூரி மீதும் டிபார்ட்மென்ட் HOD மீதும் குற்றசாட்டை வைத்துள்ளார். அதாவது மாணவர்களுக்கு பரீச்சை எழுதுவது குறித்த முறையான தகவல்களை கூறவில்லை எனவும்,  9:30 தேர்வு நேரம் என கூறிவிட்டு 2:30 மணிக்கு நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வு எழுதிவிட்டு மெயிலில் அனுப்பிய விடைத்தாள் டெலீட் செய்து விட்டதாகவும் வேறு ஒரு மெயிலில் மீண்டும் அனுப்புமாறு சொல்கிறார்கள். போன் செய்து கேட்டால் முறையாக பதில் அளிக்காமல் இன்சல்ட் செய்வதாக கூறி கோபத்துடன் வீடியோ வெளியிட்டு ஒரு மாணவியாக தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார். இதோ அவர் பேசிய வீடியோ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Abhirami Venkatachalam

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்