இப்போது வீட்டில் அமீர், நிரூப், சிபி , தாமரை, பாவினி , பிரியங்கா, ராஜு என மொத்தம் 7 பேர் உள்ளனர். இதில் யாரேனும் ஒருத்தர் தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவர். இந்நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத விதத்தில் நடிகர் சரத்குமார் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்து ஷாக் கொடுத்தார்.
அதன் ப்ரோமோ வீடியோ வெளியாகி எதிர்பார்த்ததை எதிர்பார்க்க வைத்துள்ளது. 3 லட்சம் பணம் பட்டி வைத்துவிட்டு, இந்த வீட்டில் எல்லோரும் வெற்றி பெறப்போவதில்லை. யாரேனும் ஒருத்தர் தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். எனவே விருப்பமுள்ளவர் பணப்பெட்டியுடன் வெளியேறலாம் என கூறினார். பணத்தை எடுக்கபோவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.