அடுத்த படத்தின் டைட்டில்: இயக்குனர் கார்த்திக் நரேன் தகவல்

சனி, 1 ஜனவரி 2022 (17:59 IST)
பிரபல இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாறன்’ திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் நடித்துள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
அதர்வா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், ரகுமான் உள்பட பலர் நடிப்பதாகவும் இது ஒரு ஹைபர்லிங்க் த்ரில்லர் திரைப்படம் என்றும் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்றும் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார் 
 
இந்த படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் நிறுவனத்தின் 25வது படைப்பு இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்