தூங்காவனம், கடாரம் கொண்டான் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா அடுத்ததாக ஆஹா ஓடிடி தளத்திற்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்திற்கு இறை என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சரத்குமார் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தை ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மேலும் சில நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் ஆஹா ஓடிடியில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் இந்த படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.