கேப்ரில்லாவுக்கு காதல் பத்திகிச்சு... யாரோடன்னு பாருங்க - பிக்பாஸ் வீட்டின் முதல் காதல்!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (15:26 IST)
இந்த சீசனில் எங்கடா பிக்பாஸ் இன்னும் காதல் மூட்டி விடல என நினச்சேன் இந்தா பத்திக்கிச்சு. இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் கேப்பிரில்லாவுக்கும் - பாலாவுக்கு நூல் விட்டு வேடிக்கை பார்க்கிறார் பிக்பாஸ்.

அதிலும், யாரோ யாருக்குள் இங்கு யாரோ... என ரொமான்டிக் பாடல் போட்டு அப்படி இப்படி கோர்த்துவிடுகிறார் பிக்பாஸ். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே பாலாஜியும் சரி கேபிரில்லாவும் சரி அண்ணன் தங்கை என்றே ஒருவரை ஒருவர் அழைத்து வருகின்றனர்.

அப்படி இருக்க திடீர்ரென்று இப்படியெல்லாம் BGM போட்டால் நாங்க நம்பிடுவோமா? பத்த வச்சுடாத பரட்ட. உண்மையில் பாலாவுக்கும் ஷிவானிக்கும் தான் காதல் கோர்த்துவிட பிக்பாஸ் திட்டமிட்டு செயல்பட்டது. ஆனால் அதற்கு ஷிவானி ஒத்துவராததால் தற்ப்போது கேபிரில்லாவை இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார் பிக்பாஸ். வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பே இல்ல...
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்