கலங்க வைக்கும் கடந்து வந்த பாதை - எமோஷனல் ப்ரோமோ!

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (15:23 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் தாங்கள் தங்களது வாழ்வில் கடந்து வந்த பாதைகளை குறித்தும் சில கசப்பான அனுபவங்களை பற்றியும் சக ஹவுஸ்மேட்ஸ்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில் கடந்து வந்த பாதை டாஸ்க்கின் இரண்டாம் கட்டத்தில் பாலாஜி முருகதாஸ் அனைவரையும் கலங்க வைத்துவிட்டார். " தன்னுடைய பெற்றோர் இருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தினம் தினம் குடித்துவிட்டு சிறு வயதில் இருந்து தன்னை கொடுமைப்படுத்தியாக கூறினார்.

சிறு வயதில் பள்ளியில் சேர்த்ததோடு சரி அத்துடன் 12ம் வகுப்பு முடிக்கும் வரை parents meeting'கிற்கு கூட வந்ததில்லை. " உங்களால ஒரு குழந்தையை பெத்து சரியா வளர்க்க முடியலைன்னா நீங்களா குழந்தை பெத்து என்ன பண்ண போறீங்க? என தன்னுடைய பல நாள் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்து  சக போட்டியாளர்களின் ஆறுதலில் மனதை ஆற்றிக்கொண்டார்.                                                                                                                                                     

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்