இப்ப விட்ட சான்ஸ் கிடைக்காது.. அணிவகுக்கும் முக்கிய படங்கள்! – ரிலீஸ் தேதி பட்டியல்!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (10:54 IST)
கொரோனா காரணமாக அமலுக்கு வந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

தமிழகத்தில் ஒமிக்ரான் கொரோனா காரணமாக கடந்த ஜனவரி மாதம் முழுவதும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் இருந்ததால் பெரிய பட்ஜெட் படங்கள் தங்கள் ரிலீஸை ஒத்தி வைத்தன. அப்படியாக வலிமை, ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட பல படங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாலும், கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாலும் இந்த கால இடைவெளியில் படங்களை ரிலீஸ் செய்துவிட பெரிய படங்கள் போட்டிப்போடுகின்றன. தற்போது வரை பிப்ரவரி, மார்ச் மாதத்திற்குள் வெளியாக உள்ள படங்கள் மற்றும் ரிலீஸ் தேதி விவரங்கள்…

வலிமை – பிப்ரவரி 24

எதற்கும் துணிந்தவன் – மார்ச் 10

ராதே ஷ்யாம் – மார்ச் 11

டான் – மார்ச் 25

ஆர்.ஆர்.ஆர் – மார்ச் 25

அடுத்தடுத்து பேன் இந்தியா, பெரிய பட்ஜெய் படங்கள் வெளியாவதால் அவ்வளவு படங்களையும் வெளியிடுவது குறித்து திரையரங்குகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் டான் படமும், ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படமும் ஒரே நாளில் ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்