கருணாஸுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் நடிகை !

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (18:47 IST)
முன்னாள் எம்.எல்.ஏவும், நடிகருமான கருணாஸின் நடிப்பில் உருவாகவுள்ள ஆதார் என்ற புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் நடிகை நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் சூர்யா நடித்த  நந்தா படத்தில் காமெடிய வேடத்தில் அறிமுகம் ஆனவர் கருணாஸ். பின்னர் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து அசத்தினார். இதையடுத்து, அம்மா சமுத்திரம் அம்பானி, திண்டுக்கல் சாரதி படத்தில் ஹீரோவாக நடித்தார்.

இந்நிலையில் அம்பாசமுத்திரம், திருநாள்,  உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.ராம்நாத் இயக்கத்தில் உருவாகும்  ஆதார் என்ற புதிய படத்தில் நடிகர் கருணாஸ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு  ஜோடியாக பிக்பாஸ் புகழ் ரித்விகா நடிக்கவுள்ளார். இவர்களுடன் அருண்பாண்டியன், வத்திக்குச்சி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ளார், மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்