பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கும் விமல்

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2015 (12:17 IST)
ஆரம்ப வெற்றிக்குப் பிறகு பூபதி பாண்டியன் இயக்கிய அனைத்துப் படங்களும் தோல்வியை தழுவின.

ஒரு ஹிட் அவசியம் என்ற நிலையில், நடிகர் விமலுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
 
மாப்ள சிங்கம் படத்தை முடித்துவிட்ட விமல், அஞ்சல படத்தில் நடித்து வருகிறார். இதன் பெயரை தற்போது மாற்றியிருக்கிறார்கள்.
 
இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார். பூபதி பாண்டியனின் வழக்கமான காமெடி கமர்ஷியல் ஃபார்முலாவில் இந்தப் படம் தயாராகிறது.
 
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.