சமீபத்தில் வெளியான படங்களை பார்த்ததால் பொதுநல வழக்கு போடலாமா என நினைத்தேன்… பாக்யராஜ் ஆதங்கம்!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (09:57 IST)
திரைக்கதை மன்னன் எனப் பெயரெடுத்த பாக்யராஜ் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பேசிய போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

தொடர்ந்து வெள்ளிவிழா படங்களாகக் கொடுத்து வெற்றிவாகை சூடிய பாக்யராஜ் 90 களுக்குப் பிறகு தோல்விப் படங்கள் கொடுக்க ஆரம்பித்தார். இதனால் 2000 க்குப் பிறகு அவருக்கு இயக்குனராக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடிகராக மட்டும் சில படங்களில் தலைகாட்டி வந்தார்.

இதனால் அவர் ஆடியோ விழாக்கள், திரைப்பட அறிமுக விழாக்கள் ஆகியவற்றில் அதிகமாக கலந்துகொண்டு வருகிறார். அப்படி அவர் கடைசி காதல் கதை என்ற படத்தின் விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் ‘கொரோனா லாக்டவுன் போது எப்போது திரையரங்கு திறக்கும் எனக் காத்திருந்தேன். ஆனால் இப்போது ரிலீஸ் ஆகும் படங்களைப் பார்த்தால் திறக்காமலேயே இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. சில படங்களைப் பார்த்தால் பொது நல வழக்கு தொடரலாமா என்றும் யோசித்தேன்’ எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்