“ஷட்டப் பண்ணுங்க” – ஓவியாவுக்காக பாடலை டெடிகேட் செய்யும் படக்குழு

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (11:40 IST)
‘பலூன்’ படத்தின் புரமோஷன் பாடலை, ஓவியாவுக்கு டெடிகேட் செய்துள்ளனர்.



 
கடந்த சில வாரங்களாக, எங்கு திரும்பினாலும் ‘பிக் பாஸ்’ பற்றிய பேச்சுத்தான். அதிலும், ஓவியா செய்யும் குறும்புத்தனங்கள், எல்லா ஆண்களையும் கவர்ந்துவிட்டது. திருமணமானவர்கள் முதற்கொண்டு, எல்லோருமே ஓவியா பித்துப்பிடித்து திரிகின்றனர். அதுவும், ‘ஷட்டப் பண்ணுங்க’ என்ற ஓவியாவின் வசனம் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து விட்டது.

இந்நிலையில், ‘பலூன்’ படத்தின் புரமோ பாடலை, ‘ஷட்டப் பண்ணுங்க’ என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ளனர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இயக்குனர் சினிஷும். இந்தப் பாடலை, ஓவியாவுக்கு டெடிகேட் செய்வதாகத் தெரிவித்துள்ளனர். ஜெய் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அஞ்சலி மற்றும் ஜனனி அய்யர் இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்