பாலிவுட் படங்கள் சலிப்பைத் தருகின்றன.. இயக்குனர் பால்கி கருத்து!

vinoth
வெள்ளி, 22 நவம்பர் 2024 (09:46 IST)
கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அப்படி வெற்றி பெற்ற படங்களும் தமிழ் தெலுங்கு மசாலா படங்களின் பிரதிகளாகவே உள்ளன. ஜவான் மற்றும் அனிமல் போன்ற படங்களே இதற்கு உதாரணம்.

இந்நிலையில் பாலிவுட் இயக்குனரான பால்கி இதுகுறித்து பேசும்போது “பாலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாக வெற்றி பெற்ற படங்கள் எல்லாம் முழுமையாகப் பார்க்க முடியாத அளவுக்கு சலிப்பை ஏற்படுத்துகின்றன. இப்போது எல்லோரும் படங்லகளை ஒரு பிராஜக்டாக பார்க்கிறார்கள். அதற்காக மக்களிடம் மார்க்கெட்டிங் செய்கிறார்கள். மக்களைப் பார்க்க வைத்தால் போதுமென்று நினைக்கிறார்கள். அது மக்களுக்குப் பிடிக்கிறதா என்பது பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை” எனப் பேசியுள்ளார்.

இதேக் கருத்தை சில மாதங்களுக்கு முன்னர்  இயக்குனர் அனுராக் காஷ்யப்பும் பேசியிருந்தார். அதில்  “இந்தி திரையுலகில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் 500 முதல் 800 கோடி ரூபாய் வரை வசூலையே குறிவைக்கிறார்கள். யாரும் நல்ல திரைப்படம் எடுக்க நினைப்பதில்லை. படங்களை ஊமையாக்கி, பிறகு கதைகளை தியாகம் செய்ய வேண்டியுள்ளது.ஒருபோதும் அசலான படைப்புகளை எடுக்காமல், மற்றவர்களின் படங்களை காப்பி அடித்தே எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்