அருவி நாயகிக்கு அதிர்ச்சி தந்த பாலா...

Webdunia
வியாழன், 11 ஜனவரி 2018 (21:12 IST)
அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் நடித்துள்ள அருவி படம் ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல பாராட்டை பெற்றது. திரையுலகில் நல்ல படங்களை பாராட்ட தவறாதவர் ரஜினிகாந்த். 
 
இப்படிதான் அருவி படத்தை பார்த்த ரஜினிகாந்த் அருண் பிரபுவை அழைத்து பாராட்டினார். மேலும் இயக்குநர் அருண் பிரபுவுக்கும், அதிதி பாலனுக்கும் தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்திருந்தார்.
 
அதுபோல் இயக்குனர் சங்கரும் தனது டுவிட்டர் பக்கத்தில் படக்குழுவினரை பாராட்டியிருந்தார். தற்போது இயக்குனர் பாலா, அருவி படக்குழுவினரை அழைத்து பாராட்டி இருக்கிறார். இதன் மூலம் சிறந்த இயக்குனர்களின் பாராட்டை பெற்றுள்ளது அருவி திரைப்படம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்