மீண்டும் இணையும் சூர்யா-பாலா?

Webdunia
ஞாயிறு, 8 செப்டம்பர் 2019 (09:00 IST)
பாலா இயக்கிய ‘வர்மா’ திரைப்படத்தை அந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிட மறுத்துள்ள நிலையில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் ஒரு சூப்பர்ஹிட் படத்தை கொடுத்தே ஆகவேண்டும் என்ற முனைப்பில் அவர் தற்போது ஒரு அட்டகாசமான கதையை எழுதி வைத்துள்ளாராம்.
 
இந்த கதையை கேட்டு அசந்துபோன நடிகர் சூர்யா, உடனே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், இதனையடுத்து திரைக்கதை அமைக்கும் பணியை பாலா தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது
 
‘காப்பான்’, ‘சூரரை போற்று’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முடித்த பின்னர் அவர் பாலாவுடன் சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பாலாவின் இயக்கத்தில் ஏற்கனவே சூர்யா நடித்த ‘நந்தா’ மற்றும் ‘பிதாமகன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர்ஹிட் ஆகியுள்ளதால் இந்த படமும் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என் எதிர்பார்க்கப்படுகிறது
 
மேலும் பாலா-சூர்யா இணையும் இந்த படத்திற்கு ஒரு பிரபல எழுத்தாளர் வசனம் எழுதவுள்ளதாகவும் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் லைகா தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கும் ஒரு படத்திலும் சூர்யா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்