சூர்யாவின் காப்பான் டிரைலர் ரிலீஸ் ..ரசிகர்கள் ஆரவாரம்

புதன், 4 செப்டம்பர் 2019 (19:44 IST)
சூர்யா நடிப்பில் ரிலீஸுக்கு தயராகியுள்ள காப்பான் படத்தின் டிரெய்லர் இன்று  வெளியாகி உள்ளது. 
சூர்யா, சாயிஷா, மோகன்லால், ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பிரேம், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். 
 
இந்நிலையில் காப்பான் திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவு,இசை , மற்றும் சூர்யா வரும் காட்சிகள் போன்றவை செம கெத்தாக, மாஸா இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

இன்று காப்பான் டிரைலர் ரிலீசாகி உள்ளதால் சூர்யா - ஆர்யா - மோகன்லால் -  கே.வி ஆனந்த் காம்பினேசனில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தினைக்  காணவும் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

Here we go...!!!#KaappaanTrailer#KaappaanFromSep20#BandobastFromSep20https://t.co/ObjLQQPMFO@LycaProductions@anavenkat @Mohanlal @arya_offl @sayyeshaa @bomanirani @thondankani @Jharrisjayaraj @msprabhuDop @editoranthony @drkkiran1

— Suriya Sivakumar (@Suriya_offl) September 4, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்