சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அஜித் பட குழந்தை நட்சத்திரம்!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (09:42 IST)
நடிகை அனிகா இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளாராம்.

ஜி தொலைக்காட்சியில் தனித்தீவில் போட்டியாளர்களுக்கு பலவித கடுமையாக போட்டிகள் வைக்கப்பட்டு அதில் இறுதிவரை சமாளித்துப் போராடும் விதமாக சர்வைவர் என்ற நிகழ்ச்சி உருவாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க உள்ளார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்தான் தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் பற்றிய தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு வரும் நிலையில் இப்போது என்னை அறிந்தால் புகழ் அனிகா அதில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அனிகா இப்போது கதாநாயகியாக நடிக்கவும் வாய்ப்புகள் தேடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்