‘பாகுபலி’ எழுத்தாளர் கதையில் ராகவா லாரன்ஸ்

Webdunia
சனி, 6 மே 2017 (10:39 IST)
‘பாகுபலி’க்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத், ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்திற்கு கதை எழுதுகிறார். 

 
வரலாற்று சாதனை படைத்திருக்கும் ‘பாகுபலி’ படத்தின் கதையை எழுதியவர், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின்  தந்தையான விஜயேந்திர பிரசாத். இவர், தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்திற்கு கதை எழுதுகிறார். இந்தப்  படத்தை இயக்கப் போவது, ராஜமெளலியின் அசோசியேட்டான மகாதேவ். அதற்காக, இந்தப் படமும் பிரமாண்டமான வரலாற்றுப் படம் என நினைத்துவிட வேண்டாம். ராகவா லாரன்ஸின் முந்தைய படங்களைப் போல் கமர்ஷியல்  எண்டர்டெயினராகத்தான் உருவாகப் போகிறது.
 
‘சிவலிங்கா’வுக்குப் பிறகு மறுபடியும் பி.வாசு இயக்கத்தில் நடிக்கிறார், ரஜினி நடித்த ‘மன்னன்’ படத்தின் ரீமேக் அது  என்றார்கள். ஆனால், அதைப்பற்றி யாரும் வாய்திறக்க மறுக்கின்றனர். கரு.பழனியப்பன் இயக்கத்தில் நடிக்கிறார் லாரன்ஸ்  என்றார்கள். அந்தப் படம் தாமதமாவதால், புதிய படத்தை உடனே ஸ்டார்ட் செய்யப் போகின்றனர். நாயகியாக நடிக்க காஜல்  அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அடுத்த கட்டுரையில்