கட்டு கட்டாக பணத்தை அள்ளியும் 'கபாலி' கலெக்சனை நெருங்க முடியாத பாகுபலி

Webdunia
திங்கள், 1 மே 2017 (06:07 IST)
கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் இரண்டே நாட்களில் ரூ.200 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கிடைத்த வரவேற்பை பார்த்து பாலிவுட் திரையுலகினர் அதிர்ந்து போய் உள்ளனர்.



 


ஆனால் ரஜினி ரசிகர்கள் மட்டும் 'பாகுபலி 2' வெற்றி குறித்து அலட்டி கொள்ளாமல் உள்ளனர். உலகம் முழுவதும் சக்கை போட்டு போட்டாலும் 'பாகுபலி 2' படத்தின் கலெக்சன் 'கபாலி' படத்தின் முதல் நாள் கலெக்சன் சாதனையை தமிழகத்தில் முறியடிக்க முடியவில்லை

பாகுபலி 2 படத்தின் தமிழக முதல் நாள் வசூல் 11 கோடி. கபாலி படத்தின் முதல் நாள் தமிழக வசூல் 22 கோடி, பிரம்மாண்டமாக வெளியான பாகுபலி படத்தால் கூட நெருப்புடாவை பாதிதான் நெருங்க முடிந்துள்ளது என்பதால் ரஜினி ரசிகர்கள் காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம்.
அடுத்த கட்டுரையில்