அஜித்துடன் மோதாதே! காணாமல் போய்விடுவாய்: விஷாலுக்கு தல ரசிகர்கள் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (22:50 IST)
தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தலைவருமான நடிகர் விஷால், தற்போது மிஷ்கின் இயக்கி வரும் 'துப்பறிவாளன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் இன்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.




 




த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் படமான 'துப்பறிவாளன்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேடி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே அஜித்தின் 'விவேகம்' படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும் அந்த தேதியில் ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதி என்கிறது 'விவேகம்' பட வட்டாரங்கள்

இந்த நிலையில் அஜித் படத்தின் ரிலீஸ் தினத்தில் விஷால் படமும் வெளிவரவுள்ளதை அடுத்து டுவிட்டரில் விஷாலுக்கு தல ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விவேகம் படத்துடன் துப்பறிவாளன் மோதுவதால் அஜித் படத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது, ஆனால் விஷால் படம் காணாமல் போய்விடும் என்று தல ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் டுவிட்டர் இணையதளமே பரபரப்பில் உள்ளது

ஏற்கனவே அஜித்தின் 'ஆரம்பம்' படமும், விஷாலின் 'பாண்டிய நாடு' படமும் கடந்த 2013ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி இரண்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்