அட்லியின் அடுத்த பட டைட்டில் இதுதான்: டிரைலர் ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (17:53 IST)
தெறி, மெர்சல், மற்றும் பிகில் ஆகிய மூன்று விஜய் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி அடுத்த படத்திற்கான திரைக்கதையை தற்போது எழுதி வருவதாகவும் விரைவில் அவர் இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
அட்லியின் அடுத்த படத்தில் ஷாருக்கான் நடிப்பார் என்றும் அல்லு அர்ஜுன் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விஜய்யின் அடுத்த படத்தையும் அட்லி இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்நிலையில் அட்லி தயாரிப்பில் ஏற்கனவே வெளியான ’சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது அவர் மேலும் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு ’அந்தகாரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்
 
விக்னேஷ் ராஜன் என்பவர் இயக்கி இருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர் தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியிட உள்ளதாக அட்லி தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அட்லி இயக்கும் படத்தில் தகவல்கள்தான் வெளிவரவில்லை என்றாலும் அவர் தயாரிக்கும் படம் குறித்த டஹ்கவல்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்