அஸ்வின் நடித்த ‘என்ன சொல்ல போகிறாய்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (19:46 IST)
குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் நடித்த ’என்ன சொல்ல போகிறாய்’ என்ற திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அஸ்வின் ஜோடியாக தேஜஸ்வினி மற்றும் அவந்திகா நடித்த இந்த திரைப்படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஹரிஹரன் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் ரவீந்திரன் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படம் ஓடிடியில் ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென ரிலீஸ் தள்ளிப் போனதால் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது
 
சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த நிலையில் இந்த விழாவில் அஸ்வின் பேசியது சர்ச்சைக்குள்ளானது என்பதும் இதுகுறித்த மீம்ஸ்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்