ஆர்யாவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (15:15 IST)
நடிகர் ஆர்யாவின் அடுத்த படம் "மகாமுனி " இன்று இந்த படத்தின் படப்பிடிப்பிற்கான பூஜை தொடங்கப்பட்டது. 
 
ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் 'மகாமுனி'.
 
இந்த படத்தில்  நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இணைந்து நடிக்கும் இப்படத்தில் இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 
 
மௌனகுரு பட இயக்குனர் சாந்தகுமார் இயக்கவுள்ள 'மகாமுனி' படத்தின் தொடக்கவிழா இன்று காலை சென்னையில் எளிமையாக நடைபெற்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் இயக்குநார் சாந்தகுமார், நாயகன் ஆர்யா, நாயகி இந்துஜா, ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன், கலை இயக்குநர் ரெம்போன் பால்ராஜ், எடிட்டர் வி.ஜெ சாபு ஜோசப் உள்ளிட்ட படக்குழுவினரும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துகொண்டனர். 
 
மேலும் இப்படம் குறித்து இயக்குனர் சாந்தகுமார் பேசும்போது... “கிரைம் திரில்லர் ஜானரில் ‘மகாமுனி ’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. 
 
சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்