ரசிகர்களோடு சேர்ந்து பீஸ்ட் படம் பார்த்த முன்னணி நடிகர்! வைரல் pic!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (12:46 IST)
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் திரைபிரபலங்கள் பலரும் பார்த்து வருகின்றனர்.

இன்று வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கு திரையரங்குகளில் குவிந்தனர். திரை அரங்கிற்கு வெளியேயும் உள்ளேயும் கொண்டாட்டங்கள் நடந்து சிறப்புக் காட்சிகள் தொடங்கின. பெரும்பாலான ஊர்களில் சிறப்புக் காட்சிகள் முடிந்து ரசிகர்களின் கருத்துகள் சமூகவலைதளங்களில் வெளியாக ஆரம்பித்துவிட்டன.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் பீஸ்ட் திரைப்படம் பற்றி இருவேறு கருத்துகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. ஒரு தரப்பினார் “ஆஹா ஓஹோ’ என புகழ்ந்து தள்ள மற்றொரு தரப்பினரோ ‘படம் சுத்தமாக சரியில்லை” என்று கூறி வருகின்றனர். ஒரு காட்சிதான் முடிந்திருக்கிறது என்பதால் அடுத்தடுத்த காட்சிகளில் இன்னும் துல்லியமான விமர்சனங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

பீஸ்ட் படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பல திரையுலக பிரபலங்களும் முதல்நாளே பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண் விஜய் ரசிகர்களோடு சேர்ந்து பீஸ்ட் படம் பார்த்தார். அது சம்மந்தமான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்