இளையதளபதி விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளிவருகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் அதே நாளில் விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி காத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தை அடுத்து விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தை 'கத்தி' படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளிவரும் என்றும், இந்த அறிவிப்பை ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தளபதி ரசிகர்களுக்கு கிடைத்த இரட்டை விருந்தாக கருதப்படுகிறது.